Tuesday, August 9, 2011

செக்ஸ் கல்வி ?



செக்ஸ் கல்வி தேவையா ? 
இப்போதும் பாலியல் என்பது ரகசியம்,
அது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்துப் பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர். ஏனெனில் அதுமாதிரியான மனோபாவத்தை நமது சமூகக் கலாசார அமைப்பு மனித மனங்களில் மீது திணித்து விட்டது. பாலியல் தேவை என்பது தவறோ குற்றமோ ஆகாது. அது இயல்பான ஒன்று தான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.


இயற்கையான இன்பம் அடைவதற்கும் தன் துணையுடன் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளவும் தன் இனப்பெருக்கத்திற்கும் பாலுறவு ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவையாகிறது. பாலியல் பற்றிய உண்மைகளை மறைத்து வைப்பதால் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுவது இயற்கையே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு ரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

எனவே, பாலியல் பற்றி அறிய, அனுபவிக்க, ஏதேனும் ஒரு ரகசியமான, படங்களும், தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலாரையும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வேதனை தரும் பின் விளைவுகளுக்கு உள்ளாக் கவும் காரணமாக அமைகிறது. இவற்றைத் தவிர்த்து மட்டரக உணர்ச்சிகளுக்கு முடிவுகட்டி பாதுகாப்பான பாலியல் உண்மையகளைத் தெரிந்துகொள்ள இளம் தலைமுறையினருக்கு வேண்டிய அளவு பாலியல் கல்வி வழங்குவது அவசியமாகிறது.

பாலியல் அறிவை ஊட்டுவதில் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்க்கும். இளம் வயதில் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூன்றாவது மனிதர் மூலமாகவோ, மஞ்சள் பத்திரிக்கைகள் வழியாகவோ, மோசமான கதைகள் திரைப்படங்களின் மூலமாகவோ தவறான பாலியல் அறிவு பெறுவதை விட பெற்றோரும் ஆசிரியர்களும் பாலியல் உண்மைகளை அந்தந்த வயதிலேயே அறிவுறுத்துவது நலம் பயக்கும். மேலும் பாலியல் அறிவைச் சிறு வயதிலேயே கற்றக் கொடுத்தால்தான் அவர்கள் பருவம் அடையும்போது, பொறுப்புள்ளவராகவும் நல்ல சமூகத்தின் உறுப்பினர்களாகவும் விளங்க முடியும், பாலியல் தொடர்பான குற்றங்கள் குறையும்.பாலியல் பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், தற்கொலைகள் குறையும்
Download As PDF

No comments:

Post a Comment